இந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி!

by Sasitharan, Nov 23, 2020, 18:21 PM IST

துபாய் இளவரசி ஹாயா. துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் - மகோடமுக்கின் ஆறாவது மனைவி இளவரசி ஹாயா. இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்து இல்லை இல்லை, தப்பித்து லண்டனில் வசித்து வருகிறார். அதற்கு காரணம், துபாய் மன்னர் ஷேக் கொடுத்த தொந்தரவுகள் தான் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் வென்றும் இருக்கிறார் இளவரசி ஹாயா. இந்நிலையில், துபாய் மன்னர் ஷேக்கை பிரிந்திருந்த காலகட்டத்தில் இளவரசி ஹாயா தனது காவலர் ஒருவருடன் உறவில் இருந்த தகவல் வெளிவந்துள்ளது.

தனக்கு காவல் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த ரஸ்ஸல் ஃபிளவர் என்பவருடன் இரண்டு வருடங்கள் இளவரசி ஹாயா உறவில் இருந்துள்ளார். இந்த உறவை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக காவலர் ரஸ்ஸலுக்கு ரூ.11.85 கோடி அளவில் பணம், பரிசுப்பொருட்களை அள்ளிக்கொடுத்துள்ளார் ஹாயா. கோடிக்கணக்கில் பணம், 12 லட்சம் மதிப்புள்ள கடிகாரம் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கி மற்றும் 'RU55ELLS' என்ற நம்பர் பிளேட் கொண்ட கார் என்று தனது காவலரை செல்வசெழிப்பில் குளிக்க வைத்துள்ளார். மேலும் ரஸ்ஸலுடனான உறவை வெளியில் சொல்லக்கூடாது என்று ஹாயா மேலும் மூன்று காவலர்களுக்கு 1.2 மில்லியன் டாலர்கள் வரை கொடுத்திருக்கிறார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

More World News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை