பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுமான கழகத்தில் சிவில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு உதவிப் பொறியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18-12-2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி : Civil மற்றும் Structural துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம் : இந்த பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் நிலை-16 ரூ.36400 முதல் 115700 வரை

வயது: பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மற்றும் அனைத்து வகுப்பினை சார்ந்த விதவை போன்றோர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். மேலும் 59 வயது பூர்த்தி செய்யாதவராக இருக்க வேண்டும்.மற்ற வகுப்பினர் 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களுக்கு இணைய வழி தேர்வு நடத்தப்படும். இதில் இரண்டு வகையான தாள்கள் நடத்தப்படும்.முதல் தாள் 120 கொள் குறி வினாக்களைக் கொண்டது‌ மற்றும் இரண்டாம் தாள் பொது அறிவு மற்றும் திறன் வினாக்களைக் கொண்டது.இதில் தேர்ச்சி பெறுவோர்க்கு நேர்காணல் நடத்தப்படும்.

கட்டணம்:

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகபிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படும்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவைகள் போன்றோர்க்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க www.tahdco.com இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

இதற்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/Notification-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>