பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

மொத்த பணியிடங்கள்: 814

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தின் மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 01/02/2021 ன் படி தேர்வர்கள் இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை அல்லது அதற்கு மேலான கல்வி தகுதிகள் பெற்றிருந்தால் அவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.

மேலும் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.10940 வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து கீழ்க்கண்ட வகையில் அவர்களின் சம்பளம் விகிதம் கணக்கிடப்படும். ₹ 10,940/-- per month in the scale of 10940 – 380 (4) – 12460 – 440 (3) – 13780 – 520 (3) – 15340 – 690 (2) – 16720 – 860 (4) – 20160 – 1180 (1) - 23700.

மேலும் இதர படிகள் அனைத்தையும் சேர்த்து தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக 26508 வழங்கப்படும். வீட்டு வாடகை படியாக அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதம் வழங்கப்படும்.

வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.450 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

ஆன்லைன் தேர்வு

மொழி திறமை சோதனை Language Proficiency Test (LPT)

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையம் மூலம் 15-03-2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

https://ibpsonline.ibps.in/rbirpoafeb21/

https://tamil.thesubeditor.com/media/2021/02/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :