காலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் அழைப்பு!

மின்வாரியத்தில் உதவி கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலிப்பணியிடங்கள்: 18.

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் பட்டயக் கணக்கு (CA) அல்லது ஐசிடபிள்யூஏ- வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18-ஆகஇருக்க வேண்டும். ஆதி திராவிடர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பிற வகுப்பினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30-க்குள்ளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்குள்ளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 48க்குள்ளும் இருக்க வேண்டும்.

ஊதியம்:
Level2- Rs.56300 முதல் 178000 வரை.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/Notification-AAO-2021.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement