பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

Advertisement

மத்திய அரசின் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையிலிருந்து காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 9

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் இலகு மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை.

வயது: 18 முதல் 27 வயது வரை

தேர்ந்தெடுக்கும் முறை: ஓட்டுநர் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>