எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, தமிழக அரசில் வேலை!

Advertisement

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 28.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 15

கல்வி தகுதி:

ஓட்டுநர்:

ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

கனரக வாகனம் உரிமம் பெற்று அனுப்பவும் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ஓட்டுநர் – ரூ.19500 முதல் 62000/-

அலுவலக உதவியாளர் – ரூ.15700 முதல் 50000.

வயது: 31.01.2021 அன்று வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Online மூலம் 28.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/post_32271_145.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>