லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி? பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்

by Balaji, Nov 23, 2020, 17:56 PM IST

லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளைக் கடைசி நேரத்தில் விற்ற பா. ஜ. க. ராஜ்யசபா உறுப்பினருக்கு சொந்தகமான நிதி நிறுவனத்தின் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
வாராக்கடன் அதிகமானதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் இயக்கத் தடை விதித்துள்ளது.ஒரு வாடிக்கையாளர்கள் ரூ.25000க்கு மேல் எடுக்க முடியாத நிலை.

மேலும் வங்கியில் கடன்கள் வழங்குவதும் முதலீட்டைப் பெறுவதும் அறவே தடை செய்யப்பட்டுள்ளது. வங்கியின் பங்குகளை வைத்திருப்போர் அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 98 ஆயிரம் பங்குதாரர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகரின் நிதி நிறுவனமான ஜூபிடர் கேபிடல் நிறுவனம் கடைசி நேரத்தில் லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து வெளியேறிப்பது பலரது புருவத்தை உயர்த்தி இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு லட்சுமி விலாஸ் வங்கியில் ஜூபிடர் கேபிடல் நிறுவனம் பங்குதாரராகச் சேர்ந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 70 என 30 லட்சம் பங்குகளை அப்போது வாங்கி 1.7 சதவீத பங்குதாரராக ஆனது. அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் ல மேலும் பங்குகளை வாங்கி குவித்த ஜூபிடர் கேபிடல் நிறுவனம் 2.23 சதவீத பங்குதாரர் ஆகியது.இந்த வங்கியின் பங்குகள் விலை ரூ 2017 இல் உயர்ந்த போது ஒரு சில பங்குகளை ஜூபிடர் கேபிடல் விற்றது . இனைந்த போதிலும் முழுமையாக வெளியேறவில்லை.அடுத்த ஆறு மாதங்களில் இந்த பங்குகள் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஜூபிடர் கேபிடல் தனது பங்குகளை வேகமாக விற்றுள்ளது. தற்போது இந்த வங்கியின் மிகக் குறைந்த பங்குகளே ஜூபிடர் கேபிடல் நிறுவனத்தின் வசம் உள்ளது. ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் இயக்கத் தடை விதிக்கும் நேரத்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினரின் நிறுவனம் வேகமாகத் தனது பங்குகளை விற்பனை செய்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை