செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புத்தேரி கிராமத்தை சார்ந்தவர் தாமோதரன். இவர் ஜோசியம் பார்க்கும் தொழிலை பார்த்து வருகிறார். 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டதால் அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அந்த பெண் சிறிது மனநலம் பாதித்தவர். இந்நிலையில் ஒரு மாத காலமாக தாமோதரனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதை பற்றி கிராமத்தில் உள்ள மக்களிடம் ராஜேஸ்வரி எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் உடல் நிலை மிகவும் மோசமானதால் தாமோதரன் நான்கு நாட்களுக்கு முன்பு உயிர் இழந்துள்ளார். இது தெரிந்தும் ராஜேஸ்வரி இறந்த பிணத்துடன் பேசுவது, உறங்குவது, சாப்பிடுவது என்று நான்கு நாட்களாக பிணத்துடன் வாசித்துள்ளார்.
பிறகு பிணம் அழுகி ஊர் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் கிராமத்து வாசிகள் சந்தேகப்பட்டு ராஜேஸ்வரி வீட்டிற்குள் நுழைய முயற்சித்தனர். ஆனால் ராஜேஸ்வரி உள்ளே வர விடாமல் கிராமத்து மக்களை கையில் கிடைத்த பொருள்களை வைத்து தாக்க தொடங்கினார். இருப்பினும் விடாமல் முயற்ச்சி செய்து உள்ளே சென்ற மக்கள் தாமோதரன் இறந்து உடல் அழுகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பக்கத்தில் இருந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் தாமோதரனின் அழுகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும் ராஜேஸ்வரியை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.