2020ல் வெளிநாடு செல்லாத பிரதமர்.. இதிலும் ஒரு வரலாறு!

by Sasitharan, Nov 23, 2020, 17:38 PM IST

2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற மோடி பல்வேறு நாடுகளுக்கு நட்பு ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு ஒப்பந்தங்கள், வெளிநாட்டு முதலீடுகள் பெறவும் இந்த பயணங்கள் உதவின. உலகில் உள்ள பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். தன்னை உலகத் தலைவராக உருவாக்கிக் கொண்டார். முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, மோடி உலகையே சுற்றி வருகிறார். வெளிநாட்டு பயணங்களிலேயே அவர் பல கோடிகளை செலவிடுகிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனாலும், மோடி இம்முறை பதவியேற்றதுமே வழக்கம் போல் தனது வெளிநாட்டு பயணங்களை தொடர முடிவு செய்ததாக கூறப்பட்டது.

2014 ஆம் ஆண்டு 8 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளாா். 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016 ஆம் ஆண்டு 17 நாடுகளுக்கும் 2019-ஆம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் செய்தாா். இதற்காக 2015 இல் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மட்டும் 500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யபட்டது. அதனால் இந்த ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் செல்லாத ஆண்டாக மாறியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு வெளிநாட்டு பயணங்கள் கூட இல்லாத ஆண்டாக மோடியின் பிரதமர் வாழ்க்கை வரலாற்றில் 2020 மாறியிருக்கிறது.

You'r reading 2020ல் வெளிநாடு செல்லாத பிரதமர்.. இதிலும் ஒரு வரலாறு! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை