பைசர் கொரோனா மருந்து... இன்டர்போல் தந்த திடீர் எச்சரிக்கை!

by Sasitharan, Dec 3, 2020, 09:41 AM IST

பைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் அந்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனம், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளன.

தடுப்பு மருந்துகளை மனித உடலில் செலுத்திப் பரிசோதிக்கும் முக்கிய கட்டத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பைசர் - பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்தை இங்கிலாந்து அரசு அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை இந்த தடுப்பூசி மருந்தை இன்னும் அனுமதிக்காத நிலையில், முதல் நாடாக இங்கிலாந்து அரசு அனுமதித்திருக்கிறது. இந்த மருந்தை அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து மக்களுக்குப் பயன்படுத்தப் போவதாகவும் அந்நாட்டு அரசு தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, பைசர் நிறுவனத்துக்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ``தடுப்பூசி விநோயோகத்தில் ஊடுருவ அல்லது சீர்குலைக்க சர்வதேச குற்றவாளிகள் குழு திட்டமிட்டுள்ளன. குற்றவாளிகள் குழு தங்களின் நெட்வொர்க், போலி வலைத்தளங்கள், போலி மருந்துகள் மூலம் பைசர் மருந்துகளை குறிவைத்துள்ளன. அவர்கள் கைப்பற்றிவிட்டால் மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும்" என்பது தான் அந்த எச்சரிக்கை.

பைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரேனா தடுப்பு மருந்து, மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்டப் பரிசோதனைகளில் 95 சதவீதம் அளவுக்குப் பலன் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டுக்கு முதலில் தடுப்பூசி மருந்துகள் சப்ளை செய்யப்பட உள்ளன. இதைத் தொடர்ந்தே சைபர் குற்றவாளிகள் போலி மருந்தை இணையங்களில் விற்பனை செய்யலாம் என இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்