சீனா: சாங்கே-5' திட்டத்தின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் இளம்பெண் ஸூ செங்க்யூவை சீன நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். நிலவின் பாறை துகள்களை ஆய்வு செய்வதற்காகச் சாங்கே - 5' என்கிற ஆளில்லா விண்கலத்தைச் சீனா விண்ணில் செலுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சாங்கே - 5, விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறை துகள்களைச் சேகரித்தது. தொடர்ந்து, பயணத்தின்போது, சீனாவின் கொடி நிலவில் நாட்டப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பின்னர் 3-வது நாடாக சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையைச் சீனா செய்துள்ளது. சாங்கே-5 விண்கலம் வெற்றிகரமாகப் பூமி வந்துவிட்டால் இத்திட்டம் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம் பெறும். சீனாவின் அரசு ஊடகத்தில் சாங்கே-5 திட்டத்திற்காக உழைத்தவர்களைக் குறிப்பிட்டுக் கௌரவப்படுத்தி வருகிறது. சாங்கே-5 திட்டத்திற்கு முக்கியமாக நாயகியாக ஸூ செங்க்யூ என்ற 24 வயது இளம்பெண்ணின் பெயரைச் சீன அரசு தெரிவித்ததால், சீன மக்கள் ஸூ செங்க்யூ கொண்டாடி வருகின்றனர்.
தற்போது, சீனாவின் சமூக வலைத்தளங்களில் ஸூ செங்க்யூ வைரலாகி வருகிறாள். இந்நிலையில், சீன செய்தி நிறுவனம் ஸூ செங்க்யூயை பலமுறை தொடர்புகொண்டு பேட்டியளிக்கக் கோரியபோது, தன் வேலையில், புகழ் குறுக்கிட்டு விடக்கூடாது என்று மறுத்துள்ளார். இதனால், சீன மக்கள், நெட்டிசன்கள் ஸூ செங்க்யூ சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.