மனிதக் கழிவுகளில் உள்ள மீத்தேன் மூலம் இயங்கும் மின்சார ரயில் அனைவரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய கால கட்டத்தில் நடுத்த மக்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றாலே, ரயிலில் முதலில் இடம் இருக்கிறதா என்று தான் பார்பார்க்கள். இந்த அளவிற்கு கட்டணம், அடிப்படை வசதி உள்ளிட்டவை ரயில் பயணத்தில் பொதுமக்களுக்கு மன நிறைவை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், உலகளவில் பெரும்பாலான ரயில்கள் டீசலில் இயங்கி வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் பெருமளவில் ஏற்படுக்கின்றன. இதற்காக இந்தியாவில் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மின்சாரம் அதிகம் செலவிடாமல், சுற்றுச்சூழல் சீர்கேட்டை தவிர்க்கும் வகையில், அல்ட்ரா லைட் ரயில் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் மனிதக் கழிவுகளில் உள்ள மீத்தேனை மின்சாரமாக மாற்றி ரயில் வண்டியை உருவாக்கியுள்ளது.
பிரிட்டனில் பயோ அல்ட்ரா என்ற பெயரில் இயங்கி வரும் இந்த ரயில் கார், மீத்தேன் வாயுவை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் பேட்டரிகளை சார்ஜ் செய்து இயங்குகிறது. 60 அடி நீளமுள்ள இந்த ரயில் மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பொதுவெளியில் பிரபலப்படுத்துவதற்காக 30 அடி நீளத்தில் மாதிரி ரயில் ஒன்றை இதன் வடிவமைப்பாளர்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ரயிலின் எரிபொருள் டேங்கை ஒரு முறை நிரப்பினால் 2000 மைல்கள் பயணிக்கலாம்.
மேலும், சாதரண தண்டவாளங்களிலே ரயிலை இயக்கலாம். அதேநேரத்தில் டீசல் ரயிலின் எடையை விட இந்த ரயிலில் எடை குறைவு. இதனால், ரயில் பாதையை பராமரிக்க செலவாகும், கட்டணமும் குறையும் என்றும் தெரிவித்தனர். சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத ரயில் வண்டி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த மீத்தேன் வாயால் இயங்கும் ரயில் வண்டி எந்தவிதமான நச்சுக் காற்றையும் காற்றில் கலக்காது என்றும் தெரிவித்தனர்.