போதை மருந்து ரெய்டில் மற்றொரு கன்னட நடிகை கைதால் பரபரப்பு..

by Chandru, Jan 5, 2021, 17:01 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு நடந்து வந்த நிலையில் போதை மருந்து அளவுக்கு அதிகமாக கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியாதாகவும் நடிகையும் சுஷாந்த் காதலியுமான ரியா சக்ர போர்த்தி மீது புகார் தரப்பட்டது. அவரிடம் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். அவரது சகோதரருக்கும் போதை மருந்து விவகாரத்தில் தொடர்பு இருப்பாதாக அவரையும் கைது செய்தனர். ரியா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், தீபிகா படுகோனே போன்ற நடிகைகளிடம் விசாரணை நடை பெற்றது. ஒரு மாததுக்கும் மேலாக சிறையில் அடைபட்டிருந்த ரியா பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார்.

தற்பொது இந்தியில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் போதை மருந்து விற்பவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து பெங்களுரு சிறையில் அடைத்தனர். ஒரு மாதத்துக்கும் மேலாக இருவரும் சிறையில் அடைபட்டிருந்தனர். இந்நிலையில் உடல்நிலை காரணம் காட்டி சமீபத்தில் சஞ்சனா கல்ராணி ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

ராகினி திவேதி ஜாமீன் மனு தாக்கல் செய்து ஜாமீன் கிடைக்குமா என்று காத்திருக்கிறார். மேலும் பாலிவிட்டில் காமெடி நடிகை பாரதி சிங் வீட்டிலிருந்து கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மும்பை ஓட்டல் ஒன்றில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருள் வைத்திருந்ததாக ஸ்வேதா குமாரி என்பவர் பிடிபட்டார். அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர். அப்போது தான் ஒரு நடிகை. கன்னடத்தில் ரிங் மாஸ்டர் படத்தில் நடிப்பதாகவும் தெலுங்கிலும் சில படங்களில் 2வது கதாநாயாகியாக நடிப்பதாகவும் தெரிவித்தார். அவரை போலீஸார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது திரையுலகினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை