பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனைக்கு பாக். நீதிமன்றம் தடை!

by Sasitharan, Jan 6, 2021, 21:23 PM IST

பாகிஸ்தானின் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், லாகூர் உயர்நீதிமன்றத்தில் கன்னித்தன்மை பரிசோதனை தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகள் கூறுகையில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதி செய்ய நடத்தப்படும் இரு விரல் சோதனை சட்டவிரோதமானது. இதற்கு மருத்துவ அடிப்படை இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை புண்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

You'r reading பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனைக்கு பாக். நீதிமன்றம் தடை! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை