அமெரிக்க வன்முறை `ஓர் அழகான பார்வை.. உலக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க சீனா கிண்டல்!

by Sasitharan, Jan 7, 2021, 19:30 PM IST

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை மீம்ஸ், கிண்டல் செய்து சீனா கொண்டாடி வருகிறது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனை ஒப்புக்கொள்ளாத டிரம்ப் இன்றுதான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ம் தேதி ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

இதற்கிடையே, ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கும்போதே நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 2 மைல் தொலைவில் டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் வெள்ளை மாளிகையில் புகுந்து சூறையாடினர். இச்சம்பவத்தை தடுக்க போலீசார் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து, முக்கியத் தலைவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நாடாளுமன்றம் பூட்டப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், அமெரிக்க கலவரத்தை சீனா கிண்டல் செய்து வருகிறது. 2019-ம் ஆண்டின் ஹாங்காங் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் அமெரிக்க வன்முறையை ஒப்பிட்டு மீம்ஸ், கேலி, கிண்டல் என ஒட்டுமொத்த சீன இணையதளமும் ஆர்ப்பரித்து வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' தனது ட்விட்டர் பக்கத்தில், வாஷிங்டன் கலவரங்களுடன் ஹாங்காங் எதிர்ப்பாளர்களின் புகைப்படத்தை ஒப்பிட்டு, ``ஸ்பீக்கர் பெலோசி ஒருமுறை ஹாங்காங் கலவரத்தை 'பார்ப்பதற்கு ஒரு அழகான பார்வை' என்று குறிப்பிட்டார்' 'என்று கூறி மீம் வெளியிட்டுள்ளது. இதேபோல், சீனாவின் கம்யூனிஸ்ட் இளைஞர் கழகமும் வெய்போ பக்கத்தில் அமெரிக்க வன்முறையை ஓர் "அழகான பார்வை" என்று கூறியுள்ளது. மேலும், Trump supporters storm US Capitol என்ற ஹேஷ்டேக் வெய்போ முழுவதும் 230 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More World News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை