பைடனுக்கு நெருக்கடி... அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் கிம்?!

by Sasitharan, Jan 9, 2021, 18:38 PM IST

மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். சமகால சர்வதேச அரசியலில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்சியாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தில் கிம் ஜாங் உன் இருக்கிறார். எலியும் பூனையுமாக இருக்கும் அமெரிக்கா- வடகோரியா திடீரென சமரசம் ஆக முயற்சி செய்தனர். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்து பேசியது உலகளவில் பெரும் செய்தியாக பரவியது.

தொடர்ந்து, சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் டிரம்பின் வைத்த கோரிக்கையை ஏற்று, அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா இனி ஈடுபடாது என கிம் ஜாங் உன் அறிவித்தார். வடகொரியா அதிபரும் அமெரிக்காவிடம் தங்கள் நாட்டின் மீதான சர்வதேச தடைகளை நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அணு ஆயுதங்களை முழுமையாக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா தங்கள் கோரிக்கையை ஏற்காததால், கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கிம் உன் இருக்கிறார். இதனிடையே, வட கொரியாவில் நேற்று நடந்த ஆளும் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற பேசிய அதிபர் கிம் உன், வடகொரியா மீண்டும் அதிநவீன அணு ஆயுத அமைப்புகளை உருவாக்குவதாகவும், அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்தார்.

மேலும், போர்க் கப்பல்கள், நீருக்கடியில் செலுத்தப்படும் அணு ஏவுகணைகள், உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டார். அமெரிக்காவில் புதிய அதிபராக ஜொ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜொ பைடனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனைகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்