அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு.. டிரம்ப் குறித்து பென்டகன் எச்சரிக்கை!

by Sasitharan, Jan 10, 2021, 10:14 AM IST

அணு ஆயுதங்களை பயன்படுத்த அதிபர் டிரம்ப் முயற்சி செய்யலாம் என்று அமெரிக்காவின் முப்படை தளபதிகளுக்கு சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின்போது, ஜோ பைடன் வெற்றியை எதிர்க்கும் வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரகணக்காணோர் திரண்டு நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் திடீரென கட்டுப்பாடுகளை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார். கலவரத்தில் சிக்கி மொத்தமாக 5 பேர் உயிரிழந்தனர். டிரம்ப் துண்டுதலின் பெயரில்தான் கலவரம் உருவாகியது என்று தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், கலவரத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ம் தேதி பைடன் பதவியேற்கவுள்ளார். தற்போதைய அதிபர் டிரம்பின் பதவிக் காலம் இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் டிரம்ப், பிரச்சனை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், டிரம்ப் தனது பதவிக் காலம் முடிவதற்குள் அணு ஆயுதங்களை பயன்படுத்த சங்கேத குறியீடுகளை பயன்படுத்தக் கூடும் அல்லது ராணுவ ஸ்டிரைக்கிற்கு உத்தரவிடக் கூடும் என்பதால் பென்டகன் அதிகாரிகள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாடளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி வலியுறுத்தியுள்ளார்.

You'r reading அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு.. டிரம்ப் குறித்து பென்டகன் எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை