அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம் பெர்னி சாண்டர்ஸ் உலகளவில் பிரபலமாகியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜொ பைடன் கடந்த 20-ம் தேதி அமெரிக்காவில் 46-வது அதிபராக பதவியேற்றார். வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற பிரதிநிதி பெர்னி சாண்டர்ஸ், சிங்கிள் லுக்கில் அனைவரையும் தன்னை பார்க்க வைத்துள்ளார்.
ஏன்? என்று பார்த்தால், அதிபர் பதவியேற்பு விழாவில், தலைவர்கள் கோட் சூட்டுடன் பந்தாவாக பங்கேற்றிருந்த நிலையில், பெர்னி சாண்டர்ஸ் மட்டும் குளிர்காலத்தில் அணியும் ஸ்வட்டர், முகக்கவசம், துணியால் நெய்யப்பட்ட கையுறை என வித்தியாசமான விழாவில் பங்கேற்றிருந்தார். குளிர்காலத்துல என்னடா செய்யலாம் என்று நினைக்கும் நேரத்தில் பெர்னி சாண்டர்ஸ் புகைப்படம் நெட்டிசன்களுக்கு தீ பந்தமாக கிடைத்தது.
அதிபராக ஜோ பைடன் கையெழுத்து போடும் போது அருகில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது தொடங்கி, மலையாள பட போஸ்டரில் போஸ் கொடுத்தது வரை விதவிதமான சித்தரிப்பு மீம்ஸ்களால் உலகளவில் பெர்னி பிரபலமாகியுள்ளார். இதற்கு பதிலளித்த பெர்னி சாண்டர்ஸ், குளிருக்காக அப்படி அமர்ந்து விழாவை பார்த்ததால் தெரிவித்துள்ளார்.