அமெரிக்காவின் நிதியமைச்சராக முதல்முறையாக 74 வயதான ஜனத் யெல்லன் என்ற பெண் பதவியேற்றுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று கடந்த 20-ம் தேதி அமெரிக்காவில் 46-வது அதிபராக பதவியேற்றார். தொடர்ந்து, அமெரிக்க நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நிதியமைச்சராக முதல்முறையாக 74 வயதான ஜனத் யெல்லன் என்ற பெண் பதவியேற்றுள்ளார். முன்னதாக ஜனத் யெல்லனை தேர்வு செய்வதற்கு செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 84 உறுப்பினர்கள் யெல்லனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நிதயமைச்சராக ஜனத் யெல்லன் தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பொருளாதார ஊக்குவிக்கு தொகுப்பை அறிவித்து உள்ள நிலையில், நிதி அமைச்சராக ஜனத் யெல்லன் பதவியேற்றார். ஜனத் யெல்லன் பதவியேற்பதன் மூலம் அமெரிக்காவின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள, முதல் பெண் என்ற சாதனையையும் படைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.