கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா ஓராண்டாக தமிழகத்தை சுற்றி வளைத்து தாக்குகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தை மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் பல கட்ட ஊரடங்கை சந்தித்த தமிழகம் பழைய நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தொற்று எளிதாக பரவ கூடும். இதையடத்து மாநில சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை அறிவித்துள்ளார். அதாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைக்க வேண்டும். துக்க நிகழ்வு நடக்கும் இடத்தில் அதிக கூட்டத்தை சேர்க்க கூடாது. 45 வயதை கடந்தவர்கள் தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என்பதை வலியுறுத்தியுள்ளார். சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் ஞாயிறு முதல் செவ்வாய் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.