`நாங்கள் பங்கேற்கமாட்டோம் - டோக்கியோ ஒலிம்பிக் குறித்து வடகொரியா கறார்!

by Sasitharan, Apr 7, 2021, 08:44 AM IST

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜப்பான் நகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டடது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியானது நடைபெறவில்லை. அதன்காரணமாக இந்தாண்டுக்கு போட்டியானது தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, வருகிற ஜூலை 23-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ உள்பட ஜப்பானின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும், வடகொரியா தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், தங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை என வடகொரியா இப்போது வரை கூறிவருகிறது. பகைமை விலகி இணக்கமான உறவு ஏற்பட்டது ஆனால் சர்வதேச நிபுணர்கள் இது குறித்து தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். அதே சமயம் கடந்த ஆண்டு உலக நாடுகளுக்கு கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து வடகொரியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்து இருப்பதாக வடகொரியா கூறுகிறது. வடகொரியாவின் இந்த அறிவிப்பு தென் கொரியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான இணக்கமான சூழலை உருவாக்குவதற்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலமாகவே இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை விலகி இணக்கமான உறவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading `நாங்கள் பங்கேற்கமாட்டோம் - டோக்கியோ ஒலிம்பிக் குறித்து வடகொரியா கறார்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை