ஹெச்-1பி விசா - லாட்டரி முடிந்தது

Advertisement

பணிநிமித்தம் குடியேறுபவர்களுக்கான ஹெச்-1பி விசா வழங்குவதில் 2019 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு பணிகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவு நிறைவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் ஹெச்-1 பி விசாவுக்கு விண்ணப்பிப்பதால், முறையாக நிரப்பப்பட்ட படிவங்களிலிருந்து லாட்டரி முறையில் குறிப்பிட்ட எண்ணிக்கை படிவங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அடுத்த ஆண்டுக்கான படிவங்கள் லாட்டரி முறையில் தெரிவு செய்யப்பட்டு, அவற்றுக்கான காசோலைகளிலிருந்து கட்டணம் வசூலிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆண்டு ஹெச்-1 பி விசா கேட்டு 1,90,098 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளை ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

 - thesubeditor.com

Advertisement

READ MORE ABOUT :

/body>