கட்சி தொடங்குவது உறுதி என்றும் மன்ற ஆலோசனை கூட்டங்களில் பேசுவதை வெளிப்படையாக கூற முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்கிறார். தனது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி அங்கு 10 நாட்கள் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலை துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசினார்.
இதையடுத்து அமெரிக்கா செல்வதற்கு முன்பு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனங்களை தவிர்க்க முடியாது. போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம்.
குருமூரித்தி பல ஆண்டுகளாக எனது நண்பர். அந்த வகையில் சந்தித்தோம். எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். கட்சி தொடங்குவது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும். மன்ற ஆலோசனை கூட்டங்களில் பேசுவதை வெளிப்படையாக கூற முடியாது. நிர்மலா தேவியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினார்