இந்தியாவிற்கு சீன ராணுவம் அறிவுறுத்தல்

by Ari, Apr 12, 2021, 13:53 PM IST

சர்ச்சைக்குறியய கிழக்கு லடாக்கில் தற்போது நிலவும் சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் என சீன ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுற்றிலும் நிலப்பகுதியால் சூழப்பட்ட ஏரியான பங்காங் சோ ஏரி லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பாங்கோங் சோ ஏரியின் 45 கி.மீ பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள்ளது. வடக்கு -தெற்காகச் செல்லும் இந்திய-சீன எல்லைக்கோடு ஏரியின் மேற்குப் பகுதியில் இரண்டாகப் பிரிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் பாங்கோங் சோ ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்னை நிலவுகிறது.

பாங்கோங் சோ ஏரியின் கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ச்சியாக சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா – இந்தியா ராணுவ வீரர்கள் இடையே ஆயுதங்கள் இன்றி நிகழ்ந்த சண்டையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, இந்தியா – சீனா இடையே பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய - சீன ராணுவ பிரிகேடியர் கமாண்டர் அளவிலான அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடத்தி வருகிறது.

இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ்பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் விரிவாக பேசியதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில் எல்லையில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் சீன ராணுவம் கூறியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.

You'r reading இந்தியாவிற்கு சீன ராணுவம் அறிவுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை