12 லட்சம் லைக்குகளை கடந்த பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி போட்டோ

by Ari, Apr 12, 2021, 15:04 PM IST

பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் அண்மையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஜாரக்கண்ட் மாநிலத்தில் பிறந்த பிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 2003 ஆம் ஆண்டு பாலிவுடட்டில் அடியெடுத்து வைத்தார்.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த 2018 ம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து, மணந்து கொண்டார். சினிமாவிற்கு மத்தியில், அமெரிக்காவில் இந்திய உணவுகளுக்கான பிரத்யேக ரெஸ்டாரென்ட் ஒன்றையும் துவங்க உள்ளார். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் மாறி மாறி பயணித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது லண்டனில் இருந்து வருகிறார்.

நடிப்பு, எழுத்து, வணிகம் என பன்முகத் தன்மை கொண்ட இவர் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்துக்கொள்வதும் வழக்கம்.

தற்போது தனது கணவருடன் இணைந்து கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் பிரியங்கா சோப்ரா.

சட்டை பட்டன்கள் முழுவதையும் கழற்றி விட்டு நடத்திய போட்டோ ஷூட் போட்டோக்களை 62.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் அத்தனைக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன. ஒரு ஃபோட்டோவிற்கு குறைந்தபட்சம் 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும், அதிகபட்சமாக 12 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் குவிந்து வருகின்றன. பதிவிட்ட 12 மணி நேரத்தில் நடிகை ஒருவரின் கவர்ச்சி போட்டோக்கள் இந்த அளவிற்கு லைக்குகளை அள்ளியது இதுவே முதல் முறை.

You'r reading 12 லட்சம் லைக்குகளை கடந்த பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி போட்டோ Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை