அடுத்த அமெரிக்க அதிபர்... மக்கள் விரும்பினால் போட்டி.. தி ராக் `ஆசை!

by Sasitharan, Apr 13, 2021, 18:16 PM IST

தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் ஹாலிவுட் நட்சத்திர நடிகர் டுவைன் "தி ராக்" ஜான்சன். குத்துசண்டை பார்க்கும் பலருக்கும் தி ராக் ஆஸ்தான ஹீரோவாக இருப்பார். அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜான்சன் நேற்று விட்டிருக்கும் ஸ்டேட்மெண்ட் தான் வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களாக பல ஆண்டுகளாக வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சி எடுத்து வரும் ராக், ``எங்கள் நாட்டை ஒன்றிணைப்பதற்கான குறிக்கோள் எனக்கு உள்ளது, இதுதான் மக்கள் விரும்பினால், நான் அதைச் செய்வேன் என்று நான் உணர்கிறேன். ஆம், மக்கள் விரும்பினால் நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்" என்று அறிவித்துள்ளார்.

எனினும் எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த போகிறார் என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. அவரது இந்த கருத்துக்கள் சமீபத்தில் வெளியான நிலையில், ஒரு ஆன்லைன் பொது கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 46% அமெரிக்கர்கள் ராக் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். கலிபோர்னியாவின் ஆளுநரான டெர்மினேட்டர் நட்சத்திரம் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், மினசோட்டாவின் ஆளுநரான முன்னாள் மல்யுத்த வீரர் ஜெஸ்ஸி வென்ச்சுரா மற்றும் முன்னாள் “அப்ரண்டிஸ்” நட்சத்திரம் டொனால்ட் டிரம்ப் செய்ததைப் போல ராக் ஜான்சனும் அரசியலில் இறங்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.

You'r reading அடுத்த அமெரிக்க அதிபர்... மக்கள் விரும்பினால் போட்டி.. தி ராக் `ஆசை! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை