பிரபல நடிகர் கார்த்திக் 80கள் தொடங்கி 90 களையும் தாண்டி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக். எதிர்ப்பார்ப்புடன் வந்தார். ஒரு சில படங்களில் நடித்தவர் திடீரென்று இருட்டறையில் முரட்டு குத்து அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். அதன்பிறகு நடித்த சில படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் தான் குடும்ப பின்னணி கொண்ட படங்களில் தற்போது நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
குடும்பப் பின்னணி கொண்ட 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அருண் சந்திரன் என்பவர் இயக்கத்தில் 'செல்லப் பிள்ளை' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவும் குடும்பப் பின்னணி கொண்ட திரைப்படமாக தயாராகிறது. இந்த இரண்டு குடும்பப் பின்னணி படங்களும் தான் இழந்த பெயரை மீட்டுத் தரும் என்று கவுதம் கார்த்திக் நம்புகிறார். இந்தப் படங்களைப் போலவே பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் எல் எல் பி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தற்போது "தயாரிப்பு எண் 2" என பெயரிடபட்டிருக்கிறது. இதேபோல் சிம்பு உடன் பத்து தல படத்திலும் இணைந்து நடிக்கிறார்.