கூகுள் - கணக்கில் குழப்பமா?

சமாளிப்புகளை செய்து கூகுள் நிதி நிலை அறிக்கை

by Suresh, Apr 25, 2018, 20:51 PM IST

கூகுள் குழுமத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட்டின் வரவு செலவு அறிக்கை கலங்கிய குட்டை போன்று குழப்பமாக இருக்கிறது.

முதல் நிதி காலாண்டில் ஆல்பபெட், 9.4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது. கால் டாக்ஸி செயலியான ஊபரில் செய்த முதலீடு, வீட்டு உபயோகத்திற்கான நவீன பொருட்களை கூகுளுக்கு மாற்றியது, வலைதளங்களில், 'கிளிக்' என்னும் சொடுக்குகளை கணக்கிடுவதற்கு பதிலாக, 'இம்ப்ரஷன்ஸ்'களை கணக்கிடுவது என்று பல சமாளிப்புகளை செய்து இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்பு, நிறுவனங்களின் மதிப்பில் ஏற்படும் மாறுதல், பேலன்ஸ் ஷீட்டில் பதிவு செய்யப்பட்டால் போதுமானது. அதுவே தனி நபர் நிறுவனங்கள் என்றால் எந்தப் பிரச்னையுமில்லை. நிறுவனங்களின் மதிப்பு குறித்த புதிய விதிமுறைகள், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள ஆல்பபெட் - கூகுள் குழுமத்தின் கணக்குகளில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலாண்டுதோறும் வருமான அறிக்கை தயாரிக்கப்படுவதால் ஊபர், 23அண்ட்மீ, குளோடெரா போன்ற நிறுவனங்களின் மதிப்பு மாறியுள்ளது. இப்படி காலாண்டு அறிக்கை தயாரிக்கப்படுவதால், தகவல்கள் கூடுதலாக கிடைப்பதோடு, குழப்பங்களும் அதிகமாகியுள்ளன. காலாண்டில் 2.4 மில்லியன் டாலர் லாபம் கிடைக்கும் என்பது போன்ற கணிப்புகள், பெரும்பாலும் யதார்த்தத்திற்கு மாறாகவே அமையும்.

நெஸ்ட் மற்றும் கூகுளின் ஹார்டுவேர் பிரிவுகளை ஒன்றோடு ஒன்று இணைப்பது என்பது இரண்டாவது மாற்றமாகும். குறைந்த லாபம் ஈட்டும் ஹார்டுவேர் பிரிவினை, அதிக வளர்ச்சியும், லாபமும் கொண்ட இணைய மற்றும் செயலி சேவைகளோடு இணைப்பதற்கு வலுவான காரணங்கள் ஏதும் தெரியவில்லை.

மூன்றாம் நபர் இணையதளங்களில் வெளியிடும் விளம்பரங்களுக்கான கட்டணத்தை அவற்றிற்கான ‘கிளிக்’ அடிப்படையில் கணக்கிடாமல் அவை பார்க்கப்படும் ‘இம்ப்ரஷன்ஸ்’களை கொண்டு கணக்கிடுவதாக கூகுள் கூறுகிறது. ‘இம்ப்ரஷன்’களை விட ‘கிளிக்’களை கணக்கிடுவது எளிதாகும். ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக 'கிளிக்'கள் அடிப்படையில் கூகுள் ஈட்டும் வருமானம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading கூகுள் - கணக்கில் குழப்பமா? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை