H-4 EAD - ஹெச்-4 ஈஏடி விசா - கடிதம் கூறுவது என்ன?

ஹெச்-4 ஈஏடி

by Suresh, Apr 27, 2018, 07:53 AM IST

ஹெச்-1 பி விசா, வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆறு ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கிறது.

ஹெச்-1 பி வைத்திருப்பவரின் கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் விசா ஹெச்-4 ஈஏடி. கடந்த ஆண்டே ஹெச்-1 பி விசா வழங்குவதற்கான நடைமுறைகளை அமெரிக்க அரசு கடுமைப்படுத்தியது.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, வாழ்க்கை துணைக்கு வழங்கப்படும் பணி அனுமதி விசாவான ஹெச்-4 ஈஏடியை தடுப்பதற்கான சட்டமுன்வரைவை தயாரிக்கும் வேலையை செய்து வந்தது. சமீபத்தில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவின் (யூஎஸ்சிஐஎஸ்) இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா, நாடாளுமன்ற உறுப்பினர் கிராஸ்லிக்கு எழுதிய கடிதத்தில், ஹெச்-4 ஈஏடி விசாவினை ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக கூறியுள்ளார்.

ஹெச்-4 ஈஏடி வழங்கப்படுவதை நிறுத்துவதற்கான சட்ட முன்வரைவினை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை பிப்ரவரியில் வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் ஹெச்-4 ரத்து செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் அத்துறை ஆய்வு செய்து வருகிறது. சட்டமுன்வரைவு என்பது சட்டமல்ல என்பதை உணரவேண்டும்.

ஒரு கடிதம் எழுதப்பட்டு விட்டால், தற்போது வைத்திருக்கும் ஹெச்-4 ஈஏடி விசாக்கள் திரும்பப் பெறப்படாது. புதிதாக ஹெச்-4 ஈஏடி விசா வழங்கக்கூடாது அல்லது புதுப்பிக்கக்கூடாது என்று சட்ட முன்வரைவு குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவினை தடுத்துவிடாது.

சட்டமுன்வரைவு, மக்களின் பார்வைக்கு 60 நாட்கள் வைக்கப்பட்டு, கருத்து கூற அவகாசம் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட அந்த காலம் முடிந்ததும், சட்ட முன்வரைவு குறித்து மக்கள் கூறியுள்ள கருத்துகள், கேள்விகள், சந்தேகங்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு துறை பதில்களை தர வேண்டும். குறிப்பிட்ட அந்த சட்ட முன்வரைவு, சட்டமாகும்போது என்னென்ன தாக்கங்கள் நிகழும்? என்ன பிரச்னை எழும்பக்கூடும் என்று உள்நாட்டுப் பாதுகாப்பு துறை அலசி ஆராய வேண்டும். அதற்கு பின்பும் 60 நாட்கள் கழித்தே அந்த விதி நடைமுறைக்கு வரும்.

குறிப்பாக, பிரான்சிஸ் சிஸ்னாவின் கடிதம், ஹெச்-1பி விசா குறித்த போலித்தனங்கள் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளையே விவரிக்கிறது. கூடுதலாக, ஹெச்-4 ஈஏடி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலிகான் பள்ளத்தாக்கின் பெருந்தலைகள் வெளிநாட்டு வல்லுநர்களுக்கு ஆதரவாகவும் அதிபர் டொனால்டு டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராகவும் நிற்கின்றனர். ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கம்பெர்க் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இணைந்து ஏற்படுத்திய எஃப்.டபிள்யூ.டி.அஸ், வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கான பணிவாய்ப்புகளை குறைப்பது அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று இம்மாதம் (ஏப்ரல்) 24-ம் தேதி கூறியுள்ளது.

“நாட்டின் குடியேற்ற செயல்பாடு மிகப்பழமையாகிவிட்டது உண்மைதான். புதிதாக வருபவர்களுக்கு ஒரேயடியாக கதவை அடைத்து வைப்பது அதற்குத் தீர்வாகிவிடாது. மாறாக, புதிய குடியேற்றத்தின் மூலம் பொருளாதாரம் உயர்ந்திட, வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதும், தனித்துவம் காப்பாற்றப்படுவதற்குமானன பணிகளை செய்ய வேண்டும்," என்றும் எஃப்.டபிள்யூ.டி கூறியுள்ளது.

புதிய சட்டமுன்வரைவு ஜூன் மாதம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்-4 விசா குறித்த அம்முடிவு, அவ்விசாவை வைத்திருப்பர்களில் 80 சதவீதமாக உள்ள இந்தியர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading H-4 EAD - ஹெச்-4 ஈஏடி விசா - கடிதம் கூறுவது என்ன? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை