மின்னசோட்டாவில் பனிமழையைத் தொடர்ந்து பிரமாண்ட இசைமழை!

Advertisement

தமிழ் புத்தாண்டு மற்றும் அன்னையர் தினத்தையட்டி டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் சார்பில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திரையுலகின் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் சார்பில் தமிழ் கலாச்சாரத்தை பேணி காக்கும் வைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு மற்றும் அன்னையர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக பிரம்மாண்ட இசை கச்சேரிக்கு டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் மே 5ம் தேதி மாலை 5 மணிக்கு தாமஸ் ஜேப்பர்சன் ஹைஸ்கூல், 4001-w102வது தெரு மின்னபோலிஸ் பகுதியில் நடைபெற இருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியில், சன் டிவி புகழ் ஆதவன், சூப்பர் சிங்கர் புகழ் பார்வதி, அரவிந்த் ஸ்ரீநிவாஸ், பின்னணி பாடகர்கள் முகேஷ், சர்முகி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்சியில், சப்தஸ்வரங்கள் கோபால் லைவ் ஆர்கேஸ்ட்ரா நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷனின் பிரம்மாண்ட இசை கச்சேரியை காண பார்வையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். அவர்களுக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மூன்று பிரிவிகளாக டிக்கெட் விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது. ரெகுலர், மெம்பர் மற்றும் நான் மெம்பர் ஆகியவை. இது தொடர்பான விவரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும், விவரங்களுக்கு Senthilkumaran@7632427688, Ajith@6463594684 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

 - thesubeditor.com

Advertisement
/body>