இனவாத நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தது அமெரிக்க பல்கலை!

May 5, 2018, 08:06 AM IST

பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக வந்த இரு அமெரிக்க பழங்குடி மாணவர்களை, பல்கலைக்கழக போலீஸ் தடுத்து நிறுத்தி விசாரித்தற்கு நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

தாமஸ் கானிவாக்ரான் கிரே (வயது 19), லியாட் ஸ்கனாவாட்டி கிரே (வயது 17) இருவரும் சகோதரர்கள். நியூ மெக்ஸிகோவின் சாண்டாக்ரூஸ் பகுதியை சேர்ந்த அமெரிக்க பழங்குடி இன இளைஞராகிய இவர்கள், கொலரடோ மாநில பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருந்தனர். மாணவர் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்தை சுற்றிப் பார்ப்பதற்கான அழைப்புக் கடிதம் வந்ததையொட்டி, கடந்த திங்கள் கிழமை, ஏழு மணி நேரம் பயணித்து வந்து சேர்ந்தனர்.

நகரத்தில் வழி தவறிய அவர்கள் சற்று தாமதமாக சுற்றுப் பயண குழுவில் இணைந்தனர். அக்குழுவில் இருந்த மாணவனொருவனின் பெற்றோர், பழங்குடி சகோதரர்கள்மேல் சந்தேகம் கொண்டு பல்கலைக்கழக போலீஸை அழைத்துள்ளனர். போலீஸ் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் முறையான அழைப்புக் கடிதம் பெற்றிருந்தது தெரிய வந்தது. அதற்குள் சுற்றுப்பயண குழு இவர்களை விட்டு விட்டு சென்றுவிட்டது.

இது குறித்து அதிருப்தி எழுந்ததை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இனவாத நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தது அமெரிக்க பல்கலை! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை