புழுதி புயலில் சிக்கி இரு நாட்களில் மட்டும் 125 பேர் உயிரிழப்பு

புழுதி புயலால் 125 பேர் உயிரிழப்பு

by Rekha, May 5, 2018, 07:52 AM IST

உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலும், ராஜஸ்தானின் கிழக்கு பகுதியிலும் புழுதி புயலில் சிக்கி கடந்த இரு நாட்களில் மட்டுமே 125 பேர் உயிரிந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புழுதி புயல் எதிரொலியால், உத்தரபிரதேசம் ஆக்ராவில் தாஜ்மகாலின் நுழைவு வாயில் கட்டிடத்தின் ஸ்தூபி இடிந்து விழுந்தது. அதே போல ஆக்ரா கோட்டை சுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 42 பேர் பலியாகியுனர்.

புழுதி புயல் காற்றால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து பலர் காயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் பலர் வீடுகளை இழந்து, வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'புழுதி புயலால் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைகாக 50 ஆயிரம் ரூபாயும் கருணைத்தொகையாக வழங்கப்படும்' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading புழுதி புயலில் சிக்கி இரு நாட்களில் மட்டும் 125 பேர் உயிரிழப்பு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை