நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தையும் அரசே வழங்கும். மாணவர்களுடன் செல்லும் நபருக்கு பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கும், என்றும் நுழைவு தேர்வின் சீட்டின் நகல் மற்றும் பள்ளியின் அடையாள அட்டை நகலை கொண்டு உதவித்தொகை வழங்கப்படும். என தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நீட் மாணவர்களுக்கு தனி சிறப்பு ரயில் ஒதுக்க வேண்டுமேன தமிழக அரசு சார்பில் எந்த வித கோரிக்கையும் வைக்கவில்லை.
8,500க்கும் மேற்பட்டோர் செல்லும் வகையில் உடனடியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடியாது எனவும் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தனியாக சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது’. என தெரிவித்துள்ளது.
மூன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்:
நீட் தேர்வுக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு திருநெல்வேலியிலிருந்து மூன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.