தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெண் பிரபலம் ஒருவர் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வருடா வருடம் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான வீடு போன்ற அரங்கில் சிகரெட் பிடிப்பவர்களுக்காக ஒரு சிறிய கூண்டு போன்று அமைக்கப்பட்ட தனி பகுதி ஒன்று உண்டு.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களில் சிலர் சிகரெட் பிடிக்கம் பழக்கம் கொண்டவர்கள் என்பது பலருக்கும் தெரியாது.
ஆனால், இதுவரை சிகரெட் பிடிக்காத ஒரு பெண் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
அது பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பிரபலமான திரைப்படக் கலைஞரான இளம் பெண்ணும், நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம்.
ஹொட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள். அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, "தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்கம் போயி.. " என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.
நான் "ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஃபில் ஃபிரி" என்று சொல்லி அனுப்பி வைத்தேன். புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் "Soooooory.." என்று நெளிந்தாள்.
"எதுக்கு?" என்றேன். "உங்களுக்கு ஷாக்தானே?" "அதிர்ச்சி இல்ல.. ஆனால் ஆச்சர்யமாக உள்ளது. நீங்கள் புகைப்பது தெரியாது" என்றேன்.
"எல்லாம் இந்த பிக்பாஸ்-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா?" என்றாள். "அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டேன்.
ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும் "இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல? நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது" என்றாள்” எனப் பதிவிட்டுள்ளார்.