நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!

by Ari, Apr 27, 2021, 20:13 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சமூகவலைதளங்களில் தனது டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

ராஜா ராணி தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது. இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம், குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஆல்யா.

இந்த தொடரில் திருமணம் சீரியல் புகழ் சித்து ஹீரோவாக நடித்துள்ளார். இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த தொடரின் ஷூட்டிங்கில் இருந்து சில வீடியோக்களை ஆலியா பகிர்ந்து வருவார் அந்த விடீயோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் டாப் டக்கர் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

You'r reading நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை