இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்

Advertisement

சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடரும் இளம் பெண்களிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியதாக நடிகர் டேனியல் மீது புகார் எழுந்துள்ளது.

2013ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு நண்பனாக நடித்த டேனி, அந்த படத்தில் பேசிய பிரெண்டு... லவ் மேட்டரு என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதற்கு பிறகு வெள்ளித்திரையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த டேனியை, ஆபாசம் நிறைந்த படங்களில் அதிகம் காணலாம். தொடர்ந்து தனியார் தொலைகாட்சி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு, ரசிகர்கள் வட்டாரம் விரிவடைந்தது. அதன் விளைவாக டேனியின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறி பேசியதாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் டேனி. பகல் நேரங்களில் இயல்பான குறுந்தகவல்களை அனுப்பும் டேனி, நள்ளிரவு நேரங்களில் சிறுமியின் போட்டோவை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், சில நேரங்களில் வீடியோ காலில் வர வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிறுமியிடம் அத்துமீறி இன்ஸ்டாகிராமில் டேனி அனுப்பிய குறுந்தகவல்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, முகநூலில் பின்தொடரும் ஒரு இளம்பெண்ணுக்கு, டேனி மெசேஜ் மூலம் தூண்டில் விரித்ததையும் ஒருவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிரபலமானவர், ஒழுக்கம் கெடும் வகையில் நடந்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் பின்தொடர்ந்த இளம்பெண்கள், ஒவ்வொருவராக டேனியின் சுய ரூபத்தை வெளிப்படுத்த துணிந்துள்ளனர்.

இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டேனி இதுவரை விளக்கம் அளிக்காமல் இருப்பது, புகார் மீதான சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்வதாக அமைந்துள்ளன. இதனால் டேனியை வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள், புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>