ஜிம்பாப்வேயை சேர்ந்தவர்கள் ஜெமி ஃபாக்ஸ் மற்றும் ஸனாலே நிட்லோவ். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்திற்கு சில நாட்கள் முன்னர், அதாவது ஏப்ரல் 30-ம் தேதி, இருவரும் ஆப்பிரிக்காவின் மிக நீளமான நதிகளுள் ஒன்றாக ஸாம்பஸியில் படகு பயணம் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஸனாலேவை முதலை தாக்கியது.
"நான் கத்தினேன். அவளை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தேன். அவளை தண்ணீருக்குள்ளிருந்து கஷ்டப்பட்டு தூக்கினோம். அப்போதும் அவள் வலிக்கிறது என்று சொல்லவில்லை. மருத்துவர்கள் அவள் கையை காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பினேன். முடியவில்லை," என்று ஃபாக்ஸ் கூறியுள்ளார்.
முதலை கடித்ததால், மணமகள் ஸனாலே நிட்லோவின் வலக்கை துண்டாகி விட்டது. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்து, மருத்துவமனையில் உள்ள சிற்றாலயத்தில் ஜெமி ஃபாக்ஸ் - ஸனாலே நிட்லோவ் இருவரின் திருமணம் நடைபெற்றது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com