சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் கடைவிரித்தது அமேசான் கோ!

சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய அமெரிக்க நகரங்களில் அமேசான் கோ கடை

May 15, 2018, 20:39 PM IST

பரீட்சார்த்த ரீதியாக சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய அமெரிக்க நகரங்களில் அமேசான் கோ கடை ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆனால், அதற்காக தேதி தெரிவிக்கப்படவில்லை.

அமேசான் கோ செயலியை பயன்படுத்தி மட்டுமே வாடிக்கையாளர் இக்கடையின் உள்ளே செல்லமுடியும். கடையிலிருந்து வாடிக்கையாளர் எடுக்கிற பொருட்களுக்கான தொகை, அவர்கள் கணக்கில் கழிக்கப்படும்.

அமேசான் கோ கடைகளில் காசாளர் (கேஷியர்) இருக்கமாட்டார். பொருட்களை அலமாரிகளில் அடுக்கவும், மதுபான உரிமைகளை சோதிக்கவும், பாதுகாப்புக்கும் ஊழியர்கள் இருப்பார்கள். கேமிரா மற்றும் சென்சார்கள் மூலம் கடை கண்காணிக்கப்படும்.

தற்போது சியாட்டில் நகரில் ஒரு சிறிய இடத்தில் மட்டும் அமேசான் கோ கடை இயங்கி வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் கடைவிரித்தது அமேசான் கோ! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை