ஹவாய் எரிமலையில் மீண்டும் ஏற்பட்ட வெடிப்பால் முன்பெப்போதும் இல்லாதளவு பெருமளவில் லாவாக்கள் வெளியேறி வருகின்றன.
ஹவாய் தீவின் லெய்லானி பகுதியில் உள்ள கிலவேயா (Kilaua) எரிமலை அண்மையில் வெடித்துச் சிதறியது. இதைத்தொடர்ந்து வெளியேறிய லாவாக்கள் 36 வீடுகளை எரித்து சாம்பலாக்கியதோடு, சாலைகளையும் சேதமாக்கின.
ஹவாய் எரிமலையின் செயல்பாடு நாளுக்கு நாள் துரிதமடைந்து வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாதளவு சக்திவாய்ந்த பெருவெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமெரிக்க புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்த பெருவெடிப்பால் லெய்லானி பகுதியின் பெரும்பாலான இடங்களில் லாவாக்கள் சிதற வாய்ப்பிருப்பதாகவும், மக்கள் தற்போதே விழிப்புணர்வுடன் செயல்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறும் அறிவிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஹவாய் எரிமலை வெடிப்பால் லாவாக்கள் வெளியேறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த புதிய வெடிப்பால் இதுவரை இல்லாதளவு அதிகளவிலான லாவாக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆனால், இப்போது வரை பெருவெடிப்பு ஏற்படாததால் லெய்லானி பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எப்போது பெருவெடிப்பு ஏற்பட்டு எரிமலையின் சீற்றம் அடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஹவாய் மக்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com