ஏன் இந்த கொலை வெறி.. அமெரிக்காவில் தொடரும் சம்பவங்கள்!

அமெரிக்காவில் ஒக்லஹாமா நகரில் உணவகம் ஒன்றில் நுழைந்த மனிதன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமுற்றனர்.

louies hotel

ஒக்லஹாமாவில் ஹெப்னர் ஏரிக்கு கிழக்குப் பக்கம் லூயிஸ் கிரில் & பார் என்ற உணவகம் உள்ளது. வியாழன் மாலை 6:30 மணியளவில் இங்கு வந்தவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான்.

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ஒரு பெண், அவரது மகள் உள்ளிட்ட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றனர். தாக்குதல் நடத்தியவனை உணவகத்தின் வெளியே நின்றிருந்த ஒருவர் தாம் வைத்திருந்த பிஸ்டலால் சுட்டார்.

அதில் அவன் மரணமடைந்தான். சுட்டவன் யாரென்றும் ஏன் அப்படி நடந்துகொண்டான் என்ற காரணமும் இன்னமும் தெரியவில்லை என்று ஒக்லஹாமா காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!