வளைகுடா தமிழர் குழு சார்பில் யோகா மற்றும் ஆரோக்கியம் குறித்த இலவச கருத்தரங்கு

Advertisement

கலிபோர்னியா பகுதியில், வளைகுடா தமிழர் குழு சார்பில் யோகா மற்றும் ஆரோக்கியம்  குறித்த கருத்தரங்கு நாளை நடைபெறுகிறது.அமெரிக்க வாழ் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு வளைகுடா தமிழர் குழு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இம்முறை யோகா மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒரு நாள் கருத்தரங்கிற்கு வளைகுடா தமிழர் குழு ஏற்பாடு செய்துள்ளது.

நேச்சர் மில்ஸ் மற்றும் வளைகுடா தமிழர் குழு இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கு வரும் 27ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, கலிபோர்னியா யூனியன் சிட்டி கொஹோடாக் வே (29300, kohoutek way, ste 110, Union City CA-94587) பகுதியில் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில், ஸ்கை (SKY-Smiplified Kundalini Yoga) யோகா பற்றிய அறிமுக உரை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. உணவு இடைவெளிக்கு பிறகு, மதியம் 1 மணி முதல் 3 மணி வரையில் இயற்கை வைத்தியம் மற்றும் உணவே மருந்து குறித்து சித்தா மருத்துவர் உரையாற்ற இருக்கிறார். தொடர்ந்து, 3 மணி முதல் 4 மணி வரையில், மருத்துவர்கள் குழு அடங்கிய கேள்வி பதில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குறிப்பாக, கருத்தரங்கில் யோகாவால் குணப்படுத்தப்படும் நோய்கள் குறித்த உரை அளிக்கப்படுகிறது. மேலும், சைனஸ் பிரச்னை, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீர் செய்தல், நோய்களுக்கு தீர்வு தரும் அக்குபிரஷர், உடல் தளர்வு, ஜீவ காந்தம், நாடி சுட்டி பிரநாயமா உள்ளிட்ட நேரடி பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகிறது.
கருத்தரங்கில், அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வளைகுடா தமிழ் அமைப்பு சார்பில் அழைப்புவிடுக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
/body>