ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். இவரது, இறப்பில் சந்தேகம் இருப்பதாக வழக்குகள் தொடரப்பட்டதை அடுத்து ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. மேலும், சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர். இவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா ªந்தூரபாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதித்து இருந்தபோது 52 வினாடிகள் கொண்ட ஆடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறி, அதனை மருத்துவர் சிவக்குமார் இன்று ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
அந்த ஆடியோ சற்று நேரம் முன்பு வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில், மருத்துவர் அர்ச்சனா, மருத்துவர் சிவக்குமார் ஆகியோருடன் ஜெயலலிதா உரையாடுகிறார்.
அதில், மருத்துவர் அர்ச்சனா, ரத்த அழுத்தம் 140/80 உள்ளது என கூறியதற்கு, அது எனக்கு நார்மல் தான் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
பின்னர், எதுல ரெக்கார்ட் பண்றீங்க..? ஆடியோ பதிவு செய்வது சரியாக கேட்கிறதா..? என்று ஜெயலலிதா கேட்கிறார். அதற்கு, சரியாக பதிவு ஆகவில்லை.. விஎல்சி டவுன்லோட் செய்கிறேன் என்று மருத்துவர் கூறியிருக்கிறார்.
முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.. இதற்காகதான் நான் அப்போவே கூப்பிட்டேன்.. எடுக்க முடியாது என கூறிவிட்டீர்கள்.. ஒன்னு கெடக்க ஒன்று செய்கிறீர்கள் என்று ஜெயலலிதா கூறினார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதோ அந்த ஆடியோ..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com