லேப்டாப் பயன்படுத்த தெரியாத அமைச்சர்கள் இன்னும் ஆறு மாதங்களில் கற்றுக்கொள்ளவில்லை என்றால் பதவி நீக்கம் செய்யப்படும் என நேபாள அமைச்சர் கே.பி.சர்மா ஒளி எச்சரித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கே.பி.சர்மா ஒளி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று உள்ளார். இவர் பொறுப்பேற்ற பிறகு, நாட்டில் பல்வேறு அதிடி திட்டங்களை அமல்படுத்தப்போவதாக கூறினார்.
இந்நிலையில், இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம் காகிதம் பயன்படுத்தாக அலுவலகமாக மாறும் என அவர் அறிவித்தார். அதாவது, அங்கு காகிதத்திற்கே இனி இடமில்லையாம். கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்துமே லேப்டாப் மூலமாகவே விவதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் உதவியாளர்களிடம் இருந்து லேப்டாப் பயன்படுத்துவது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நேபாள பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார்.
அவ்வாறு 6 மாதங்களுக்குள் லேப்டாப் பயன்படுத்த கற்றுக் கொள்ளவில்லை என்றால் அமைச்சர்களின் பதவி நீக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.