அரச குடும்பம் என ஊரை ஏமாற்றிய போலி ஆசாமி கைது!

by Rahini A, May 31, 2018, 12:16 PM IST

இளவரசர் காலித் பின் அல்-சாத் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த நபர் மீது மோசடிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட போதுதான் இந்த காலித் இளவரசர் இல்லை என்பதும் இவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

உண்மையில், இளவரசராக ஏமாற்றிய அந்த நபர் ஒரு அமெரிக்கர். கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த அந்தோனி கிக்னாக் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் மிகவும் கீழ் வகுப்பைச் சேர்ந்த அந்தோணி, மிகவும் ஏழையானவர் கூட. தன்னை ஒரு சவுதி இளவரசர் என மற்றொரு மாநிலத்தில் வந்து ஆடம்பரமான ஆடை, ஆபரணங்கள், கார் என சொகுசு வாழ்க்கையைப் போலியாக வாழ்ந்து பணக்காரத் தொழிலதிபர்கள் பலரை கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார் அந்தோணி.

தன்னை சுல்தானாக அறிவித்துக்கொண்ட அந்தோணியிடமிருந்த அத்தனை ஆடம்பரங்களும் போலியானவை. ஆடம்பர கார், ஆஅடம்பர ஆபரணங்கள் என அனைத்தும் போலியானவை.

அவற்றை வைத்துக்கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 26 முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் அந்தோணி. சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மியாமி நீதிமன்றத்தில் அந்தோணி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நிரூபிக்கவும்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அரச குடும்பம் என ஊரை ஏமாற்றிய போலி ஆசாமி கைது! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை