மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பது குறித்து ஆலோசனை

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறியுள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் இதடையே முதல் சேவையை தொடங்கியது. இதற்காக, ரூ.14 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2009ம் ஆண்டில் பணி தொடங்கப்பட்டது.

இதன் பிறகு, சின்னமலை - விமானநிலையம், ஆலந்தூர் - பரங்கிமலை, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே படிப்படியாக மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதைதொடர்ந்து, கடந்த 25ம் தேதி நேரு பூங்கா - சென்டிரல், சின்னமலை - தேனாம்பேட்டை ஏ.ஜி. & டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அன்று முதல் ஐந்து நாட்களுக்கு பொது மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஆனால், இலவச பயணம் முடிந்த நிலையில், மெட்ரோ ரயில் வெறிச்சோடி காணப்படுகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்க ரூ.70 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது தான் மக்கள் வரத்து குறைந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதைதொடர்ந்து, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறியுள்ளார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!