தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் தமிழகக் காவல்துறை நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்ற்னர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கு அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முக்கியக் காரணமே சமூக விரோதிகளின் ஊடுருவல்தான்” எனக் கூறினார்.
சமூக விரோதிகளை எப்படிக் காரணம் காட்டலாம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினி பதிலளிக்கையில், “எது தெரியும், எப்படித் தெரியும் எனக் கேட்காதீர்கள். எனக்குத் தெரியும். எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்” என ஆவேசமடைந்தார்.
இதை அரசியல் விமர்சகர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ரஜிக்கு எதிராகவே விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இனி மேல் தூத்துக்குடியை இத்தனைக் காலம் மாசு அடையச் செய்ததும் சமூக விரோதிகள்தான் எனக் கூறுவார்கள்” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.