கவுதமாலா நாட்டில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், இதுவரை 99 பேர் இறந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. இங்குள்ள பியூகோ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்து சிதறியது. இதில் இருந்து வெளியேறிய தீக்குழம்பால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாம்பல் சூழ்ந்த நிலையில் சிக்கிக் கொண்டதால் மக்கள் வெளியேறவும் மிகவும் அவதிப்பட்டனர்.
இதைதொடர்ந்து, மத்திய தேசிய பேரிடர் மீட்பு படையினர் எரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், எரிமலை குழம்பில் சிக்கி நேற்று முன்தினம் வரை 69 பேர் பலயானதாக தகவல் வெளிவந்த நிலையில், நேற்று இதன் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.