தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காக காத்திருப்பதாக கூறிய அவர், அங்கு கலவரம் நடந்ததற்கு, சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களுமே காரணம் என குற்றம்சாட்டினார்.
ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்றும், அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி, அவர்களின் ஒப்புதலுடன் ஆலையை திறக்க முயற்சிப்போம் என்றும் ராம்நாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கலவரத்தில் உறவுகளை பறிக்கொடுத்த குடும்பத்தினரின் ரணம் ஆறாத நிலையில், ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரியின் இந்த பேச்சு, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.