உலகின் வயதான உராங்குட்டன் வகை மனித குரங்கு இறந்தது!

வயதான உராங்குட்டன் வகை மனித குரங்கு இறந்தது!

by SAM ASIR, Jun 21, 2018, 18:48 PM IST

உலகின் வயதான உராங்குட்டன் வகை மனித குரங்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் மிருக காட்சி சாலையில் இறந்தது.

Sumatran Orangutan

இந்தக் குரங்கு 1968-ம் ஆண்டு முதல் இந்த மிருக காட்சி சாலையில் இருந்து வந்தது. 2016-ம் ஆண்டு மிகவும் வயதான உராங்குட்டன் என்று கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா காடுகளில் 1956-ம் ஆண்டு இக்குரங்கு பிறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இறக்கும்போது இதற்கு வயது 62. காடுகளில் இவை அதிகபட்சம் 50 ஆண்டுகள் மட்டுமே வாழும்.

இறந்துபோன இக்குரங்குக்கு 11 குட்டிகள் உட்பட 54 வம்சாவளிகள் உள்ளன. இதன் பரம்பரை குட்டிகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று ஆஸ்திரேலிய மிருக காட்சி சாலை கூறியுள்ளது.

You'r reading உலகின் வயதான உராங்குட்டன் வகை மனித குரங்கு இறந்தது! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை