அமெரிக்கா இண்டியானாவில் கடந்த வாரம் புதன்கிழமை, கவலையீனம் காரணமாக லாரியில் இருந்த மனித கழிவுகள் சாலையில் கொட்டப்பட்டன.
இண்டியானா, பிரௌன்ஸ்டவுணில் யு.எஸ்.50 என்ற சாலையில் சென்று கொண்டிருந்த கழிவு லாரியிலிருந்து மனித கழிவுகள் சாலையில் விழுந்தன. லாரியின் கதவுகள் சரியாக பூட்டப்படாததால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட முக்கால் மைல் தொலைவுக்கு கழிவுகள் பரவியதாக தெரிகிறது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது.
அந்த நிறுவனம் கழிவுகளை சுத்தம் செய்த பிறகு, போக்குவரத்து சீரானதாக கூறப்படுகிறது. லாரியில்ருந்து சிந்தியது அகற்றுவதற்கான வழிமுறைகளுக்குட்படுத்தப்பட்ட கழிவாகும். இந்த தகவலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலர் கிண்டல் பதிவுகளை செய்துள்ளனர்.